ஓவரா கலாய்க்கிறார்கள்... நான் டுவிட்டர் பக்கமே செல்வதில்லை; ஸ்மிருதி இராணி
சமூக வலைதளங்களில் அரசையும் அரசியல்வாதிகளையும் மோசமாக பேசுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்மிருதி இராணி கூறியுள்ளார்.
ஒளிபரப்புத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
டுவிட்டரில் அரசையும், அரசியல்வாதிகளையும் மோசமாக, விதவிதமாக எதிர்த்து பேசுகிறார்கள். இதனால் நான் எனது டுவிட்டர் பக்கத்தை பார்ப்பதே இல்லை. தொழில்நுட்பம் அரசை கட்டுப்படுத்துவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. செய்திகள் கூட சமூக வலைத்தளத்தை நம்பித்தான் இருக்கிறது.
இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். அரசுக்கு எதிராக பேசப்படும் விஷயங்களை கண்காணித்து வருகிறோம். விரைவில் இதை கட்டுப்படுத்த உரிய வழிமுறைகளை பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.