திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 16 மார்ச் 2018 (11:47 IST)

இன்றைய சமூக வலைத்தள வைரல்; முதியவருக்கு உதவிய மனிதாபிமான போக்குவரத்து காவலர்!

சென்னையில் சாலையோரம் அரை நிர்வாணமாக இருந்த முதியவருக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் மனிதாபிமானத்துடன் புது லுங்கி வாங்கிக்கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

 
சென்னையில் சாலையோரம் துணி இல்லமால் கிடந்த முதியவருக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் மனிதாபிமானத்துடன் புது லுங்கி வாங்கி
கொடுத்துள்ளார். மேலும் அவரை உட்கார வைத்து அவரிடம் பேசியுள்ளார்.
 
இதனை சாலையில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு பாராட்டியுள்ளது. தற்போது இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது. 
 
பொதுவாக காவலர்கள் மீது பொது மக்கள் பல குற்றச்சாட்டுகளை கூறுவது உண்டு. அதுவும் குறிப்பாக போக்குவரத்து காவலர்கள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகள் எழும். இந்நிலையில் போக்குவரத்து காவலர் மனிதாபிமானத்துடன் செயல்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.