செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (11:54 IST)

’சினம் கொண்ட இந்தியா’ - 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

அசாம் மாநிலத்தில், கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க தீவிரவாதிகள் 6 பேரை ராணுவம் சுட்டுக் கொன்று உள்ளது.
 

இறந்த ஆறு பேரில், கர்பி மக்கள் விடுதலைப் புலிகள் இயக்க முக்கிய தலைவரர்கள் இரண்டு பேரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். 
 

கர்பி அங்லாங் மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் நடந்த இந்த மோதலில் ராணுவ வீரர் ஒருவர் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவ்கள் தெரிவிக்கின்றன.

இந்த மோதல் நள்ளிரவு ஒரு மணிக்கு நடந்ததாக கூறப்படுகிறது.