ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (17:26 IST)

சீதாராம் யெச்சூரியின் உடல் தானம்.! மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்கிய குடும்பத்தினர்..!!

Sitharam
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலை, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
 
நுரையீரல் தொற்று நோய் பாதிப்பால் கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சீதாராம் யெச்சூரி அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவர்களின் பராமரிப்பில் இருந்து வந்த அவரது உடல்நிலை கடந்த ஒரு சில நாட்களாக கவலைக்கிடமாக இருந்து வந்தது. 
 
கடந்த 20 நாட்களுக்கும் மேலாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார்.

Sitharam Body
உடல் தானம்:
 
இந்நிலையில், மருத்துவ  சீதாராம் யெச்சூரியின் உடல், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.