செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2020 (08:01 IST)

மேலும் ஒரு மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடை: பட்டாசு ஊழியர்களின் கதி என்ன?

தீபாவளி அன்று இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்கும் வழக்கம் உள்ள நிலையில் திடீரென இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்கள் பட்டாசு வெடிக்க தடை விதித்து வருவது பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்காளம், ஹரியானா, ராஜஸ்தான், ஆகிய நான்கு மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சிக்கிம் மாநிலத்திலும் பட்டாசு வெடிக்க தடை என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
இதுகுறித்து சிக்கிம் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ’சிக்கிம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், நோய்த்தொற்றில் இருந்து குணமானவர்கள் பட்டாசு புகை காரணமாக சுவாசிக்க கஷ்டப்படுவார்கள் என்றும் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு பட்டாசு வெடிக்க சிக்கிம் மாநிலத்தில் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இந்த அறிவிப்பு பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் ஊழியர்கள் ஆகியோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீபாவளியை நம்பி வருடம் முழுவதும் பட்டாசு உற்பத்தி செய்துவந்த உற்பத்தியாளர்கள் அந்த பட்டாசுகளை விற்பனை செய்ய முடியாமல் போனால் பெரும் நஷ்டத்தைச் சந்திப்பார்கள் என்றும் அதனால் பட்டாசு வெடிக்கும் தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் மேலும் ஒரு சில மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது