புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2019 (13:23 IST)

உதவியாளரை ”பளார்” என அறைந்த முன்னாள் முதல்வர்: வைரல் வீடியோ

தனது உதவியாளரை ”பளார்” என அறைந்த முன்னாள் முதல்வரின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, மைசூர் விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களை சந்தித்து திரும்பும் போது, அவருடைய உதவியாளர் சித்தராமையாவிடம் எதையோ கூறியபடி செல்ஃபோனை நீட்டினார். அதற்கு கோபப்பட்ட சித்தராமையா உதவியாளரை பளார் என கன்னத்தில் அறைந்தார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உதவியாளர் சிபாரிசு சம்பந்தமாக யாரிடமோ பேச சொல்லி சித்தராமையாவிடம் தனது செல்ஃபோனை நீட்டியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

courtesy ANI