டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு!
தலைநகர் டெல்லியில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் தீஸ் ஹசரி நீதிமன்றத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், இருவரும் ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக அங்குள்ள காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும், இத்துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த நீதிமன்ற வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் பற்றி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.