1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 3 ஜூலை 2023 (11:52 IST)

பிரதமர் இல்லத்தின் மேல் திடிரென பறந்த டிரோன்: டெல்லியில் பரபரப்பு

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் திடீரென பிரதமர் மோடி இல்லத்தின் மேல் ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லியில் உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் இன்று அதிகாலை 5.30 அளவில் மர்மமான ட்ரோன் ஒன்று பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
விமானங்கள் கூட பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் அனுமதி இன்றி ட்ரோன் பறந்ததால் பாதுகாப்பு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர் 
இதனை அடுத்து ட்ரோன் பறந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார்  தெரிவித்துள்ளனர். தற்போது வரை அந்த ட்ரோனை இயக்கியது யார் என்று கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இது அயல்நாட்டு சதியா என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
அதிகாலையில் திடீரென பிரதமர் மோடியின் இல்லத்தின் மேல் டோன் பறந்ததால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran