திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2020 (15:51 IST)

சுயேட்சை வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

பீகார் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன் முதல் கட்டமாக கடந்த அக்டோபர் 28 ஆம் தேதியும்,  3 ஆம் தேதி இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற்றது. 3 ஆம் கட்டமாக நாளை நடக்கவுள்ளது. வரும் 10 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், நாளை 78 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளதால் சில கட்சிகளும் சுயேட்சைகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஹயகாட் என்ற பகுதியில் போட்டியிடும் ரவீந்தரசிங் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.