பாஜக எம்.பி மீது ஷீ வீச்சு : பத்திரிக்கையாளர் சத்திப்பில் பரபரப்பு

bjp
Last Modified வியாழன், 18 ஏப்ரல் 2019 (15:04 IST)
ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜி.வி.எல். நரசிம்மராவ். இவர் பாஜக செய்தி தொடர்பாளராக இருக்கிறார். இன்று இவர் டெல்லியில் உள்ள  பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பத்திரிக்கையாளர்களிடம் நரசிம்மராவ் பேசிக் கொண்டிருந்தார். அப்போது செய்தியாளர்களின் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் திடீரென்று தனது ஷூவை கழற்றி வீசினார்.
bjp
இதனையடுத்து அவரைப் பிடித்து பாஜகவினர் அவரை தனியே கூட்டிச் சென்று இதற்கான காரணம் பற்றி விசாரித்தனர்.
 
பாஜக எம்.பி ஒருவர் மீது ஷூ வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

 
 


இதில் மேலும் படிக்கவும் :