வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : புதன், 17 ஏப்ரல் 2019 (14:46 IST)

கடுகளவாச்சும் சூடு சொரண இருக்கா..? அன்புமணியை நாரடித்த அழகிரி

நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி திட்டுக்கொள்கின்றனர். அந்த வகையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, அன்புமணியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.  
 
அவர் கூறியதாவது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாக அன்புமணி தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். 
 
ராகுல் இப்படி பேசியதாக கூறப்படுகிற அவதூறு பேச்சுக்கு அன்புமணி ஆதாரங்களை காட்டுவாரா? மற்றவர்களுக்கு சூடு சொரணை இருக்கிறதா என கேட்கிற அன்புமணிக்கு, அது கடுகளவாவது இருக்குமேயானால் ராகுல் பேசாத பேச்சிற்கு ஆதாரம் கட்ட வேண்டும்.
இப்படி எல்லம் பேசி தமிழக் மக்களை ஏமாற்றலாம் என நினைத்தால் அது பகல் கனவாகதான் முடியும். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை  அமைச்சர் நிதின் கட்கரி கட்டுப்பாட்டில் இருக்கிற மத்திய நீர்வள ஆணையம்தான் கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்தது. இதற்கு துணை போனது பாஜக அரசு என்பதை அன்புமணியால் மறுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.