செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 25 மே 2018 (19:31 IST)

கொலைகார அரசு: பாஜகவை வார்த்தையால் வருத்தெடுத்த சிவசேனா!

சிவசேனா கட்சி தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டிருந்தது பின்வருமாறு...
 
மும்பையில் பிரச்சாரம் செய்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாத் சத்திரபதி சிவாஜி சிலைக்கு மாலை அணிவிக்கும் போது, காலில் செருப்பு அணிந்து சென்றார். இது சத்ரபதியை அவமானப்படுத்தும் செயலாகும். இதற்கு பாஜக என்ன சொல்லப்போகிறது?
 
நம்பிக்கைக்கும், நேர்மைக்கும் புகழ்பெற்ற மஹாராஷ்டிரா மாநிலத்தின் நற்பெயரை பாஜக தற்போது கெடுக்கத் தொடங்கிவிட்டது. பாஜகவின் முதுகில் சிவசேனா குத்திவிட்டதாக ஆதித்யநாத் குறை கூறுகிறார். 
 
இன்றைய சூழலில் பாஜக மனப்பிறழ்வு கொலைகாரராக அலைகிறது. அவர்களின் பாதையில் யார் வந்தாலும், அவர்களை குத்திக் கொல்கிறது. அனைவரையும் குற்றவாளிகளைப் போல் பார்க்கிறது.
 
சிவசேனாவின் தலைவர் பால்தாக்ரேயின் முதுகில் பலமுறை குத்திவிட்டு, அவருக்குத் துரோகம் செய்தவர்களுக்கு எல்லாம் பாஜக வாய்ப்பு கொடுத்து. அரசியல் முழுவதிலும் சுயநலம்பிடித்தவர்கள் இருந்தாலும், சிவசேனாவும், அதன் காவிக்கொடியும் தன்னுடைய சொந்த தொண்டர்களால் தொடர்ந்து செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டிள்ளது.