புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 செப்டம்பர் 2021 (10:57 IST)

பழைய இரும்புக் கடையில் பதுக்கப்பட்ட 3 டன் செம்மரங்கள்… கைப்பற்றிய போலிஸார்!

திருவள்ளூர் மாவட்டம் புதுப்பேட்டையில் இருந்த ஒரு பழைய இரும்புக் கடையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 டன் செம்மரங்கள் கைப்பற்றப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டிக்கு அருகே உள்ள ஒரு பழைய இரும்புக் கடையில் செம்மரங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலிஸாருக்கு செய்திகள் வந்ததை அடுத்து அங்கு அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது, 3 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து கடையில் வேலை செய்த விஷ்வானந்  என்ற வடமாநில இளைஞரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில்  இம்ரான், ரவீந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த கட்டைகள் ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்டு சென்னைக்கு அனுப்ப இருந்ததாக தெரிய வந்துள்ளது.