வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 டிசம்பர் 2025 (12:59 IST)

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்

சசி தரூரின் தொடர் 'ஆப்சென்ட்': ராகுல் காந்தி தலைமையிலான கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூர், இன்று நடைபெற்ற மக்களவை எம்.பி.க்கள் கூட்டத்தை மீண்டும் தவிர்த்தார். பிரதமரை பாராட்டிய கருத்துகளால் கட்சி தலைமையின் அதிருப்தியை பெற்றுள்ள தரூர், கடந்த மூன்று வாரங்களில் அவர் தவிர்த்த இது மூன்றாவது கூட்டம் ஆகும்.
 
இன்று, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், குளிர்கால கூட்டத்தொடர் குறித்த ஆய்வு மற்றும் பா.ஜ.க. மீதான தாக்குதல் உத்திகளை வகுப்பதற்காக இந்த கூட்டம் நடந்தது. சசிதரூர், தனது தனிப்பட்ட உதவியாளரின் திருமணம் மற்றும் சகோதரியின் பிறந்தநாள் போன்ற தனிப்பட்ட நிகழ்வுகளை காரணம் காட்டி இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
 
முன்னதாக, வாக்காளர் மறு சரிபார்ப்பு எதிர்ப்பு மற்றும் உத்தி வகுக்கும் கூட்டங்களிலும் அவர் பங்கேற்கவில்லை. ஒருபுறம் உடல்நலக்குறைவு என காரணம் கூறிய அவர், மறுபுறம் பிரதமர் மோடியை பாராட்டிப் பதிவிட்டது கட்சிக்குள் மேலும் சர்ச்சையைக் கிளப்பியது. 
 
 
Edited by Mahendran