1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified செவ்வாய், 29 நவம்பர் 2022 (13:48 IST)

ஆந்திர முதல்வரின் தங்கையை காரோடு தூக்கி சென்ற போலீஸ்! – வைரலான வீடியோவால் பரபரப்பு!

Sharmila reddy
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டின் சகோதரி சர்மிளா ரெட்டியை தெலுங்கானா போலீஸ் காரோடு டோவ் செய்து கொண்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி. இவர் தெலுங்கானாவில் ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். சமீபத்தில் சர்மிளா ரெட்டி ’ப்ரஜா ப்ரஸ்தானம் பாதயாத்ரா’ என்ற பெயரில் தெலுங்கானாவில் யாத்திரை நடத்தி வருகிறார்.

நேற்று இந்த பாத யாத்திரையை நடத்தும் சர்மிளா ரெட்டியின் கேரவன் வாகனத்திற்கு சிலர் தீ வைத்ததால் பெரும் பரபரப்பு எழுந்தது. அதை தொடர்ந்து ஆளும் சந்திரசேகர் ராவை கண்டித்து சர்மிளா ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சர்மிளா ரெட்டி வந்த காரை தெலுங்கானா போலீஸார் கிரேன் மூலம் டோவ் செய்து சென்றுள்ளனர். காருக்குள் இருந்த சர்மிளா ரெட்டியை வெளியேற்றாமல் ஆபத்தான முறையில் அவரை காருக்குள் வைத்து டோவ் செய்து காரை இழுத்துக் கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சர்மிளா ரெட்டியின் கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

Edit By Prasanth.K