செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஜனவரி 2022 (10:42 IST)

3வது நாளாக பங்குச்சந்தை சரிவு: 60 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் இறங்கியது சென்செக்ஸ்

கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது
 
கடந்த 2 நாளாக மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் தினமும் 500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று காலை பங்குச்சந்தை தொடங்கியது முதலே சரிவில் இருந்த சென்செக்ஸ் தற்போது 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது என்பதும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 60 ஆயிரத்துக்குள் சென்செக்ஸ் வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் நிப்டி 100 புள்ளிகளுக்கு மேல் சரிந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் தினமும் 500 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது