1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 19 ஜனவரி 2022 (10:37 IST)

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் கவலை!

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 500 புள்ளிகள் மேல் நேற்று குறைந்த நிலையில் இன்றும் 200 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
 
மும்பை பங்குச் சந்தை இன்று காலை தொடங்கியவுடன் சென்செக்ஸ் 250 புள்ளிகள் குறைந்து 60 ஆயிரத்து 503 என்ற புள்ளியில் வர்த்தமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி அறுபத்தி 78 புள்ளிகள் குறைந்து 18,045 என்ற புள்ளிகளில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
மும்பை பங்குச்சந்தை தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சரிவடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், எதிர்காலத்தில் இந்திய பங்குசந்தை நல்ல லாபத்துடன் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது