வாரத்தின் 2வது நாளான இன்றும் சென்செக்ஸ் சரிவு: அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்!
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில வாரங்களாக ஏற்றத்தில் இருந்தது என்பதும் 60 ஆயிரத்துக்கும் மேல் சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென 700 புள்ளிகள் சரிந்த நிலையில் நேற்றும் 400 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் குறைந்ததால் முதலீட்டாளர்கள் கலக்கத்தில் உள்ளனர்
இந்த நிலையில் இந்த வாரத்தின் இரண்டாவது நாளாக இன்றும் சென்செக்ஸ் சரிவுடன் வர்த்தகம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 55 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 720 என்ற புள்ளிகளில் தற்போது வர்த்தமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 5 புள்ளிகள் குறைந்து 17 ஆயிரத்து 480 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய பங்குச்சந்தை மாலைக்கு மேல் ஏற்றம் காண வாய்ப்பு இருப்பதாக பங்கு சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.