1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (17:20 IST)

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி நடனமாட வைத்த கும்பல்.. புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையா?

Girl Rape
இளம்பெண்ணை நிர்வாணமாக்கி நடனம் ஆட வைத்த கும்பல் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் அந்த பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் இந்தூரில் இளம் பெண்ணை  நிர்வாணமாக்கி   பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் நடனமாட வைத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்து 19 நாட்கள் ஆகியும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததால் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் பெண்ணின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது இது குறித்து வழக்குப்பதிவு செய்து 90 நாட்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்

பாதிக்கப்பட்ட பெண் தனது மனுவில் தன்னை நிர்வாணமாக்கி பெல்டால் அடித்ததாகவும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தொலைக்காட்சியில் பாடல்களை போட்டு அரைமணி நேரத்துக்கு மேலாக தன்னை நிர்வாணமாக நடனமாட வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இயற்கைக்கு மாறாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து தான் ஐந்து பேர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அதே நேரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.


Edited by Mahendran