திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 10 டிசம்பர் 2018 (09:00 IST)

நேரலையில் சரமாரியாக அடித்துக் கொண்ட கட்சி பிரமுகர்கள்: போர்க்களமான விவாத மேடை

உத்திரபிரதேசத்தில் தொலைக்காட்சி நேரலையில் இரு கட்சி பிரமுகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் அந்தத்நத மாநிலங்களில் ஏற்படும் அரசியல் நிகழ்வுகள் குறித்து அன்றாடம் விவாத நிகழ்ச்சிகளை நடத்துவர். இந்த விவாத நிகழ்ச்சியில் பல்வேறு கட்சியை சார்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்கள் கட்சியின் சார்பாக விவாதிப்பார்கள்.
 
அப்படி உத்திரபிரதேசத்தில் நேற்றிரவு செய்தி தொலைக்காட்சியில் ஒரு விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விறுவிறுப்பாக விவாத நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாஜக கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரும்  சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த  பிரமுகர் ஒருவரும் காரம்சாரமாக விவாதித்துக்கொண்டிருந்தனர்.
ஒரு கட்டசத்தில் விவாதமானது, கைக்கலப்பாக மாறியது. அங்கிருந்தவர்கள் இதனை தடுக்க முயற்சி செய்தும் முடியவில்லை. சற்று நேரத்தில் அங்கு வந்த போலீஸார் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த  பிரமுகரை அழைத்து சென்றனர். இதனால் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.