திருப்பதி தேவஸ்தானத்தில் சேகர் ரெட்டிக்கு மீண்டும் பதவி!

sivalingam| Last Modified வியாழன், 19 செப்டம்பர் 2019 (20:44 IST)
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகம் சார்பில் தேவஸ்தான உறுப்பினராக சேகர் ரெட்டியை மீண்டும் ஆந்திர அரசு நியமித்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிபிஐ அதிகாரிகளால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஆந்திர அரசு மீண்டும் அவரை தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக நியமித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தின் சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட சேகர் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது, ‘பெருமாள் என்னை கைவிடவில்லை' என்று கூறினார். மேலும் இதுவரைக்கும் பெருமாளை நம்பி வாழ்ந்து வந்ததாகவும், இடையில் நடந்த விஷயங்கள் குறித்து பேச முடியவில்லை, அது ஒரு கெட்ட நேரம், தேவஸ்தானத்தில் நான் செய்து வந்த முக்கிய பணிகளை இனிமேல் தொடர்வேன் என்றும், பெருமாள் சேவை செய்வதே எனக்கு ஆனந்தம் என்றும் சேகர் ரெட்டி தெரிவித்தார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்களிடம் வாய்ப்பு கேட்டிருந்ததாகவும், முதல்வர் பெரிய மனது வைத்து பெருமாளுக்கு சேவை செய்ய எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்றும் சேகர் ரெட்டி மேலும் தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :