1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (09:30 IST)

லாட்ஜ் அறையில் ரகசிய கேமிரா.. புதுமண தம்பதியை மிரட்டியவரை பொறி வைத்த பிடித்த போலீஸ்..!

லாட்ஜ் அறையில் ரகசிய கேமரா வைத்து அந்த அறையில் தங்க வந்த புதுமண தம்பதிகளை பணம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் பொறிவைத்து பிடித்துள்ளனர்  
 
கேரளாவின் கோழிக்கோடு என்ற பகுதியில் திருமண ஜோடி லாட்ஜ் ஒன்றில் தங்க வந்திருந்தனர். அவர் தங்கிய அறையில் கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமராவை லாட்ஜ் ஊழியர் முனீர் என்பவர் பொருத்தியதாக தெரிகிறது. 
 
இதனை அடுத்து தம்பதிகள் உல்லாசமாக இருந்த போது  கேமராவில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை காண்பித்து தம்பதியை பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட தம்பதிகள் போலீசில் புகார் அளித்த நிலையில் பணம் தருவதாகவும் குறிப்பிட்ட இடத்திற்கு வருமாறு தம்பதியினர் முனீருக்கு போன் செய்தனர் 
 
அவர் தனியே பணம் வாங்க வந்தபோது மறைந்திருந்த போலீசார் அவரை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இதேபோல் அந்த லாட்ஜில் தங்க வந்த பலரிடமும் பணம் பறித்தது தெரியவந்துள்ளது.
 
Edited by Siva