வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (14:08 IST)

அடுத்த 3 நாட்களுக்கு கொளுத்தப்போகும் வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

heat
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிக அதிகமாக வெயில் அடித்து வருகிறது என்பதும் 8 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட டிகிரி செல்ஸியல்ஸ் வெப்பம் உள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அடுத்த 3 நாட்களுக்கு தற்போது இருப்பதைவிட 3 டிகிரி அதிகமான வெப்பம் இருக்கும் என்று எச்சரித்துள்ளது 
 
எனவே காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசிய தேவை இருந்தால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 ஆனால் அதே நேரத்தில் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது