கர்ப்பிணிப் பெண்கள் பணி நியமன சர்ச்சை! – உத்தரவை வாபஸ் பெற்ற எஸ்.பி.ஐ!
கர்ப்பிணிப் பெண்களுக்கு பணி நியமனம் வழங்குவது தொடர்பாக எஸ்.பி.ஐ வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்றுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் பணி நியமனங்களில் 3 மாதம் கர்ப்பிணிப் பெண்களை பணி நியமனம் செய்வதில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தது.
இந்நிலையில் தற்போது அந்த அறிவிப்பை திரும்ப பெறுவதாக பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கைகள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.