வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 29 டிசம்பர் 2017 (21:03 IST)

அபராத தொகையையே கோடியில் சம்பாதித்த எஸ்பிஐ....

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை குறித்த அறிவிப்பையும், அதற்கான அபராதங்கள் குறித்தும் கடந்த ஏப்ரலில் எஸ்பிஐ சில அறிவிப்புகளை வெளியிட்டது. 
 
வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத்தொகையை பராமரிக்க வேண்டும் அப்படி இல்லையென்றால்  பராமரிக்காதவர்களிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவித்து அபராத தொகையையும் வசூலித்துள்ளது. 
 
2017-18 ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடம், எஸ்பிஐ வங்கி ரூ.1771.77 கோடி அபராதம் வசூலித்துள்ளதாக மத்திய நிதித்துறை இணைமந்திரி ஷிவ்பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார். பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது குறித்து அவர் தெரிவித்தார்.
 
மேலும் அவர் கூறியதாவது, எஸ்பிஐ வங்கி 2016-17 ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடம் அபராதமே வசூலிக்காத நிலையில், 2017-18 ஆம் நிதியாண்டில் வாடிக்கையாளர்களிடம் 1771.77 கோடி ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. 
 
மொத்தமுள்ள 21 வங்கிகளில் எஸ்பிஐ வசூலித்த அபராத தொகைதான் அதிகம். எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து பஞ்சாப் நேசனல் வங்கி, ரூ.97.34 கோடி அபராதம் வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது என தெரிவித்துள்ளார்.