வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 18 ஜூலை 2017 (12:04 IST)

பேரம் பேசிய சசிகலா தரப்பு ; வளைந்து கொடுக்காத ரூபா : நடந்தது என்ன?

சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த கர்நாடகத்துறை டிஐஜி ரூபாவிடம், சசிகலா தரப்பு பேரம் பேசியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூர் அக்ரஹார சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவிற்கு, தனி சமையலைறை உட்பட பல வசதிகளை, சிறை அதிகாரிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், இதில் சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவிற்கும் தொடர்பு இருப்பதாகவும், இதற்காக சில சிறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி பணம் கைமாறப்பட்டதாகவும், சிறைத்துறை டிஐஜி ரூபா கடந்த  14ம் தேதி பரபரப்பு புகார் அளித்தார். 
 
இதையடுத்து, இதுபற்றி விசாரிக்க முன்னாள் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் அங்கு சென்று விசாரணையை தொடங்கவில்லை. அந்நிலையில், சிறையில் நடந்த விதிமிறல்கள் குறித்த ஆதரங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக ரூபா மீண்டும் புகார் கூறினார்.  மேலும், அவரையும், டிஜிபி சத்யநாராயணாவையும் வேறு பணிக்கு மாற்றம் செய்துள்ளது கர்நாடக அரசு.
 
இந்நிலையில், சிறையில் நடந்த விதிமீறல்களை வெளிக்கொண்டு வந்த ரூபாவிடம், ஒர் ரகசிய இடத்தில் சசிகலா தரப்பு பேரம் பேசியதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 
 
பெங்களூர் பழைய மெட்ராஸ் சாலையில் உள்ள ஹோட்டலில்தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஆனால், ரூபா எதற்கும் வளைந்து கொடுக்கவில்லை. மேலும், இது பற்றியும் நான் மீடியாவிடம் பேச வேண்டுமா? என கேள்வி எழுப்ப, வந்தவர்கள் அப்படியே திரும்பிவிட்டாரகளாம். ஆனாலும், டெல்லி பாஜக பிரமுகர் ஒருவர் மூலம் கர்நாடகாவில் அதிகாரத்தில் உள்ள சிலரை பிடித்து, ரூபாவை பணி மாற்றம் செய்து விட்டனர் என செய்திகள் வெளிவந்துள்ளது.