சலுகைகள் ரத்து ; தொடர் உறவினர்கள் மரணம் : கண்ணீர் விட்டு கதறும் சசிகலா


Murugan| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (11:53 IST)
சமீபத்தில் இறந்து போன தனது அண்ணி சந்தானலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பரோல் கிடைக்காததாலும், சிறையில் தனக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து செய்யப்பட்டதாலும், கவலையில் சசிகலா கண்ணீர் வடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 

 
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு 5 தனி அறைகள், சமையலறை உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக டிஐஜி ரூபா சமீபத்தில் கூறிய புகார் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து, அவருக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் மறுக்கப்பட்டு, சாதாரண சிறைக்கைதி போலவே அவரும் நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், சமீபத்தில் அவரின் அண்ணி சந்தானலட்சுமி மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த சசிகலா தரப்பில் பரோலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால், அவர் சசிகலாவின் இரத்த சம்பந்தம் இல்லை எனக் கூறி சிறை நிர்வாகம் பாரோல் தர மறுத்துவிட்டதாக தெரிகிறது.
 
ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் சசிகலாவின் அண்ணன் மகன் சகாதேவன் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அப்போதும் சசிகலா பரோலில் வெளியே வருவார் என எதிபார்க்கப்பட்டது. ஆனால், அவர் வரவில்லை. 
 
உறவினர்களின் தொடர் மரணம், சிறையில் சலுகைகள் ரத்து, குடும்பத்தை விட்டுப் போன ஆட்சி மற்று கட்சி என தொடர் சோதனைகளை சந்தித்து வருவதால், சிறையில் உள்ள சக பெண் கைதிகளிடம் துக்கத்தில் சசிகலா கண்ணீர் வடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :