1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (12:47 IST)

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை: சரத் பவார் கருத்து

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

புதிய மதுபான கொள்கை முறையீடு விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான மனிதர் என்றும் டெல்லியில் உள்ள அனைவருக்கும் இது தெரியும் என்றும் ஆனால் அவர் கைது செய்யப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும்  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.


கடந்த 10 ஆண்டுகளாக டெல்லி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர் என்றும் ஆனால் தற்போது ஆம் ஆத்மி அமைச்சர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran