வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (09:04 IST)

”சிவசேனா ஆட்சி அமைப்பது உறுதி”..

மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் இழுபறி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதில் மும்முரமாக உள்ளது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை திடீரென சந்தித்து பேசினார் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி.சஞ்சய் ராவத். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் ராவத், “மஹாராஷ்டிராவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வேளாண் மந்திரி என்ற அடிப்படையில் இது குறித்து பிரதமரை சந்திக்க வேண்டும் என சரத் பவாரிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

மேலும் ”மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும்” என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.