திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 19 நவம்பர் 2019 (13:39 IST)

துப்பாக்கியுடன் “pose” கொடுத்த இளைஞர்... அலேக்காக தூக்கிச் சென்ற போலீஸ்

சமூக வலைத்தளத்தில் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் ஃபோட்டோவை இணையத்தில் பதிவேற்றிய இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் லைக் மோகத்தால் பல வித்தியாசமான முயற்சிகளில் புகைப்படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றுபவர்கள் பலர் இங்கு உண்டு. இந்நிலையில் மஹாராஷ்டிராவை சேர்ந்த ஒரு இளைஞர், இது போல் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டு போலீஸில் மாட்டியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தை சேர்ந்த ரிஷிகேஷ் ராஜு ஜாவ்லேகர் என்ற 21 வயது இளைஞர், சமூக வலைத்தளத்தில் தனது கையில் துப்பாக்கி வைத்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார்.

இதனை அறிந்த பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த போலீஸார், உடனடியாக விரைந்து ஜாவ்லேகரை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கி ஒன்றையும் மேகசின் ஒன்றையும் கைப்பற்றினர்.