வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (14:08 IST)

கொலை செய்வதற்கு முன் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்ற சஞ்சய் ராய்.. பெண் டாக்டர் வழக்கில் திருப்பம்..!

கொல்கத்தாவில் பெண் டாக்டரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய் கொலை செய்வதற்கு முன்பு சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்று வந்ததாக சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிய வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ தினத்தன்று இரவில் சஞ்சய் ராய் சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள இரண்டு இடங்களுக்கு சென்றதாகவும் அதன் பின்னர் தான் நள்ளிரவில் மருத்துவமனை சென்று பயிற்சி பெண் டாக்டரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும்  விசாரணையில் தெரிய வந்துள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் சஞ்சய் ராய்க்கும், அனுப் என்பவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பால்தான் மருத்துவமனைக்கு அடிக்கடி சஞ்சய் ராய் வந்து சென்றுள்ளதாகவும்  அதுமட்டுமின்றி மருத்துவமனையில் அனைத்து பகுதிகளுக்கும் சஞ்சய் ராய் சென்று வர முடிந்ததாகவும் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சிபிஐக்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அனுப் மற்றும் சஞ்சய் இடையேயுள்ள தொடர்புகள் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் விசாரணையில் சில திருப்பங்கள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. கொலை செய்வதற்கு முன் பாலியல் தொழில் நடைபெறும் இடங்களுக்கு சஞ்சய் ராய் சென்றதை எடுத்து சோனா கஞ்ச் பகுதியில் உள்ளவர்களுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்குமா என்பது என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Edited by Mahendran