திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 7 மார்ச் 2018 (16:41 IST)

மோடியை மோடி என குறிப்பிட்டதால் சம்பளம் கட்...

இந்திய பிரதமர் மோடியை மாண்புமிகு, ஸ்ரீ என குறிப்பிடாத்தால், மோடியை மரியாதை குறைவாக பேசியதாக கூறி ராணுவ வீரர் ஒருவருக்கு சம்பளம் வழங்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நடியாவின் மஹத்பூரில் எல்லைப்பாதுகாப்பு படையின் 15வது பட்டாலியன் தலைமையகம் உள்ளது. இங்கு வழக்கம் போல் எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களுக்கு ஜீரோ பரேடு நடந்துள்ளது. 
 
வீரர்களின் பரேடின் போது கான்ஸ்டபிள் சஞ்சீவ் குமார், பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சி ஒன்றை மோடி நிகழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார். எனவே, சஞ்சீவ் குமார் பிரதமரை அவமரியாதை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 
 
எனவே, சஞ்சீவ் குமார் மீது பிரிவு 40ன் கீழ் சட்டத்திற்கு புறம்பான நடத்தை என கூறி நடவடிக்கை எடுக்கபட்டு, 7 நாட்கள் சம்பளமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.