வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 14 ஆகஸ்ட் 2018 (08:55 IST)

சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் கடந்த சில நாட்களாக கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளம், மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாகவும், ரூ.8 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
இந்த நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள   பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டோடி வருகிறது. இதனால் ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியில் அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகம் இருக்கும் என்பதால் இம்முறை சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவித்துள்ளது
 
குறிப்பாக இன்றும், நாளையும் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என்றும் வெள்ளத்தின் அளவு குறைந்த பின்னர் தேவசம் போர்டு அறிவிப்புக்கு பின்னர் பக்தர்கள் வரலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது