வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 17 அக்டோபர் 2023 (07:41 IST)

சபரிமலையில் இன்று நடைதிறப்பு.. ஆன்லைனில் முன்பதிவு செய்தால் மட்டுமே தரிசனம்..!

சபரிமலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடை திறக்கப்படும் நிலையில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆன்லைனில் கண்டிப்பாக முன்பதிவு செய்து இருக்க வேண்டும் என தேவஸ்தானம் அறிவுறுத்துள்ளது. 
 
ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் சபரிமலையில் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்படும். அந்த வகையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு சபரிமலையில்  நடை திறக்கப்படுகிறது. 
 
ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் நாளை முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஆனால் அதே நேரத்தில் ஆன்லைன் முன்பதிவு மூலம் பக்தர்கள் அனுமதி பெற்று இருந்தால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்றும் தேவசானம் அறிவித்துள்ளது. 
 
எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Siva