1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2023 (15:45 IST)

சபரிமலை சீசனை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

Train
சபரிமலை சீசன் தொடங்கி விட்டதை அடுத்து  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சபரிமலை சீசனை ஒட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அங்கு சிறப்பு ரயில்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
செகந்திராபாத் - கொல்லம் சிறப்பு இரயில்கள்:
 
டிசம்பர் 8 மற்றும் ஜனவரி 12, 19 - பிற்பகல் 3 மணிக்கும்
டிசம்பர் 24, 31 - மாலை 4.30 மணிக்கும்
ஜனவரி 7 - மாலை 4.30 மணிக்கும்
ஜனவரி 10, 17 - மாலை 4.00 மணிக்கும்
ஜனவரி 14 - பிற்பகல் 2. 40 மணிக்கும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படும்.
 
கொல்லம் - செகந்திராபாத் சிறப்பு இரயில்கள்:
டிசம்பர் 9 மற்றும் ஜனவரி 13, 20 - இரவு 11 மணிக்கும்
டிசம்பர் 26 மற்றும் ஜனவரி 2, 9, 12, 19, 16 - நள்ளிரவு 2.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
 
விஜயவாடா - கோட்டையம் சிறப்பு இரயில்கள்:
டிசம்பர் 1, 8, 29 மற்றும் ஜனவரி 12, 19 - இரவு 10.50 மணிக்கும்
டிசம்பர் 15, 22 மற்றும் ஜனவரி 5 - மாலை 4.25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
 
கோட்டயம் - விஜயவாடா சிறப்பு இரயில்கள்:
டிசம்பர் 3, 10, 17, 24, 31 மற்றும் ஜனவரி 7, 14, 21 - நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
 
ஆந்திரா, நர்சாபூர் - கோட்டயம் சிறப்பு இரயில்கள்:
டிசம்பர் 10 ,17, 24, 31 மற்றும் ஜனவரி 7, 14 ஆகிய தேதிகளிலும், 
 
கோட்டயம் - நர்சாபூர்
 
டிசம்பர் 11, 18, 25 மற்றும் ஜனவரி 8, 15 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
 
மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான சிறப்பு ரயில்களை இன்று முதல் ரிசர்வ் செய்து கொள்ளலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran