சபரிமலை சீராய்வு மனு: நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என அறிவிப்பு
சபரிமலைக்கு வரும் அனைத்து வயது பெண்களும் ஐயப்பனை வழிபடலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து பல சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த சீராய்வு மனுக்கள் நவம்பர்ம் 13ஆம் தேதி அதாவது இன்று விசாரணைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன் இந்த சீராய்வு மனுக்கள் விசாரிக்கும் பணி தொடங்கியது.
ஆனால் சபரிமலை கோயில் தொடர்பான சீராய்வு மனுக்களை நீதிமன்றத்தில் விசாரிக்க கோரிய மனு நிராகரிக்கப்பட்டது. இந்த சீராய்வு மனுக்கள் நீதிபதி அறையில்தான் விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. எனவே இன்னும் சற்றுநேரத்தில் நீதிபதியின் அறையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு வரவுள்ளது.