செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (15:54 IST)

மேல்முறையீடு இல்லை: சபரிமலை நிர்வாகம் அறிவிப்பு

சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்களை அனுமதிப்பது தொடர்பான தீர்ப்பை  எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதில்லை கேரள தேவஸ்தனம் போர்டு தெரிவித்துள்ளது.
பெண்களை சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் அனுமதிப்பது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குள் செல்லலாம் என்று கடந்த 28ஆம் தேதி தீர்ப்பளித்தது. 
 
இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக தேவஸ்தனம் போர்டு தலைவர் கூறியிருந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதில்லை என சபரிமலை கோவில் அதிகாரிகள் தற்பொழுது தெரிவித்துள்ளனர்.