1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 3 மார்ச் 2017 (23:22 IST)

கேரள முதல்வரின் தலைக்கு விலை பேசிய சந்திராவத்துக்கு ஆர்.ஆர்.எஸ் கண்டனம்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ. 1 கோடி பரிசு வழங்கப்படும் என்று சந்திராவத் நேற்று கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆர்.எஸ்.எஸ். கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் தாங்கள் ஒருபோதும் வன்முறையை ஏற்க மாட்டோம் என்றும் கூறியுள்ளது.




தன்னுடைய பரிசு பேச்சு குறித்து விளக்கம் கூறிய சந்திராவத், '“நான் தெரிவித்தது என்னுடைய சொந்தக்கருத்து. ஆர்.எஸ்.எஸ் கருத்து இல்லை. சுதந்திர போராட்ட வீரர், பகத்சிங் ஆங்கிலேயர்கள் மீது குண்டு வீசியது போல என்னுடைய பேச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று விளக்கம் அளித்தார்.

ஆயினும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாத ஆர்.எஸ்.எஸ். தலைமை சந்திராவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நந்தகுமார் இதுகுறித்து கூறியபோது, 'ஆர்ப்பாட்டங்களின்போது பல்வேறு பேச்சாளர்கள் வருவார்கள். எனவே, அவர்களில் ஒருவர் பேசிய பேச்சு சங்கத்தின் அதிகாரப்பூர்வமான அறிக்கை அல்ல. ஆர்.எஸ்.எஸ். நிறுவப்பட்ட நாளில் இருந்தே தனிநபர்களை பண்பாளர்களாக உருவாக்கும் பணியிலும், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்-க்கு வன்முறையில் நம்பிக்கை கிடையாது. ஜனநாயக ரீதியில் கண்டனம் செய்வதைத்தான் ஏற்கும். எனவே, குந்தன் ஆவேசப்பட்டு பேசிய பேச்சை சங்கம் கடுமையாக கண்டனம் செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்