1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 21 அக்டோபர் 2021 (13:02 IST)

மீண்டும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் விற்பனை !!

நாளை அக்டோபர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என தகவல்.  

 
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில மாதங்களாக சிறப்பு தரிசனத்திற்கு மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 ஆம் தேதி முதல் உள்ளூர் மக்களுக்கு இலவச தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து தரப்பு மக்களுக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. 
 
இந்நிலையில், நாளை அக்டோபர் 22 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் நவம்பர் மாதத்துக்கான ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் எனத் தெரிவித்துள்ளது. இதில் ஒரு நாளைக்கு 12,000 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 23 முதல் தினமும் 10,000 பேருக்கு இலவச தரிசன நுழைவு சீட்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.