ரூ.251 ஸ்மார்ட்போன் இன்று முதல் விநியோகம்
ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட, ரிக்கிங் பெல்ஸ் நிறுவன ரூ.251- ஸ்மார்ட்போன் இன்று முதல் வினியோக்கிக்கப்படுகிறது.
ரிங்கிங் பெல்ஸ் என்ற நிறுவனம் மிகக் குறைவான விலையாக ரூ.251-க்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்படும் என கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் அந்த நிறுவன இணையதளத்தை முற்றுகையிட்டனர். இதனால் அந்த இணையதளம் முடங்கும் அளவுக்குப் போனது.
அதன் பின்னர், ரூ.251-க்கு எப்படி ஸ்மார்ட் போன் வழங்க முடியும் என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து, மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் அந்த நிறுவனம் குறித்து ஆய்வு நடத்தின. சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தைத் திருப்பி அளிப்பதாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்தது.
அதன் பின்னர், செல்போன் கையில் கிடைக்கும் போது பணம் செலுத்தும் முறையை அந்த நிறுவனம் அறிவித்தது. அதன்படி இன்று முதல் அந்த ஸ்மார்ட் போன் விநியோகிக்கப்பட இருக்கிறது.
முதலில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த 30 ஆயிரம் பேருக்கு, ஸ்மார்போன் வினியோகிக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும், ரிக்கிங் பெல்ஸ் நிறுவனம், மிகக் குறைந்த விலையில் எல்.இ.டி டிவியையும் அறிமுகப்படுத்த இருக்கிறது.