குழந்தைகள் செல்போன் உபயோகித்தால் அபராதம்: கிராமசபையில் கட்டுப்பாடு!
குழந்தைகள் செல்போன் உபயோகித்தால் அபராதம் என கிராம சபை ஒன்று கட்டுப்பாடு விதித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தற்போது செல்போன் உபயோகித்து வருகின்றனர் என்பதும் செல்போன் இல்லாத மக்களை இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.
ஆனால் சிறுவயதில் உள்ள குழந்தைகள் செல்போனை உபயோகிப்பதால் அவர்கள் படிப்பு தடைபடுவது மட்டுமின்றி கெட்ட பழக்க வழக்கங்களும் ஏற்படுவதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் செல்போன் உபயோகித்தால் 200 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பான்சி என்ற கிராமத்தினர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
குழந்தைகள் செல்போன்களுக்கு அடிமையாவதை தடுக்கவே இம்முடிவை எடுத்துள்ளதாக கிராம சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த முடிவுக்கு அந்த கிராமத்தில் உள்ள பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran