செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 7 டிசம்பர் 2021 (20:36 IST)

ரூ.20 கோடி அபராதம் விதிக்கும் மசோதா தாக்கல்?

ரூபாய் 20 கோடி அபராதம் விதிக்கும் மசோதா நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப் படுவதாக கூறப்படுவதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் கிரிப்டோகரன்சி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் இது தொடர்பான விதிகளை மீறுவோருக்கு 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் இயற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது
 
இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்கள் அவற்றின் மதிப்பை அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அதன் அடிப்படையில் வரி கட்ட வேண்டும் என்றும் கூறப்படுகிறது 
 
வரி கட்டுவது குறித்த விதிகளை மீறுவோருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.