நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தனிநபர் மசோதா! – திமுக எம்.பி வில்சன் தாக்கல் செய்தார்!
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி வில்சன் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. எனினும் மத்திய அரசின் நீட் தேர்விற்கு தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் எதிர்ப்பும் இருந்து வருகிறது. தமிழகத்தில் நீட் பாதிப்புகளை ஆய்வு செய்ய சமீபத்தில் குழு அமைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி வில்சன் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தனிநபர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினருக்கு இருக்கும் சிறப்பு உரிமை அடிப்படையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.