புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (23:16 IST)

ரூ. 20 நாணயம் அச்சடித்தவர் கைது….

மும்பையில் உள்ள நாணயம் அச்சடிக்குன்  நிறுவனத்தில் சபுக்ஸ்சுவார் என்ற நிறுவனத்தில் ரூ. 20 நாணயங்கள் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு ரூ.1, ரூ,2, ரூ.5, ரூ,10 ஆகிய நாணயங்கள் அச்சடித்து வெளியிட்டது அவை தற்போது  புழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில், மும்பையில் நாணயங்கள், பதக்கங்கள் அச்சடிக்கும் நிறுவனத்தில் பணியாற்று வரும் ஒருவரின் டேபிள் லாக்கரில் ரு, 20 மதிப்பு கொண்ட இரு நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பாதுகாப்பு அதிகாரிகள்  கொடுத்த தகவலின்படி உயரதிகாரிகள் அங்கு சோதனை செய்து அவரைக் கைது செய்தனர்.

மத்திய அரசு ரூ,20 நாணயங்களை வெளியிடவில்லை என்பதால் சபுக்ஸ்வாருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 7 ஆண்டுகள் சிறைதண்டனை கிடைக்கும் என தகவல்கள்  வெளியாகிறது.