1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 30 டிசம்பர் 2019 (06:41 IST)

குடியுரிமை இல்லாதவர்களை இத்தாலிக்கு அழைத்து செல்லுங்கள்: ராகுலுக்கு மத்திய அமைச்சர் ஆலோசனை!

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களுக்கு குடியுரிமை வேண்டும் என போராட்டம் செய்யும் ராகுல் காந்தி, அவர்களை எல்லாம் இத்தாலிக்கு அழைத்துச் செல்லலாம் என மத்திய அமைச்சர் ஒருவர் ஆவேசமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் இந்த போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இது குறித்து அவ்வப்போது ஆவேசமாக தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார் 
 
இந்த நிலையில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ’வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கு குடியுரிமை வேண்டும் என கேட்கும் ராகுல் காந்தி, அவர்கள் எல்லோரையும் இத்தாலிக்கு அழைத்துக்கொண்டு தாராளமாக செல்லலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் குடியுரிமை சட்டம் குறித்த பொய்யான தகவல்களை ராகுல்காந்தி தெரிவிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார் 
 
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அவர்களின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் என்ன பதிலளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்