1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 28 ஜூன் 2022 (14:30 IST)

ஒரே மாதத்தில் ரூ.1.14 லட்சம் கோடி பரிவர்த்தனை: கிரெடிட் கார்டு சாதனை

credit
ஒரே மாதத்தில் 1.14 லட்சம் கோடி ரூபாய் நாடு முழுவதும் கிரெடிட் கார்டு மூலம் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 
 
இந்தியாவில் நாளுக்கு நாள் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் அதில் செய்யப்படும் பணப்பரிமாற்றத்தின் தொகையும் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
இந்த நிலையில் கடந்த மே மாதத்தில் மட்டும் இந்தியாவில் கிரெடிட் கார்டுகளின் மூலம் ரூபாயை 1.14 லட்சம் கோடி ரூபாய் பரிவர்த்தனை செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
குறிப்பாக எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி மற்றும் எஸ்பிஐ கார்டு ஆகிய வங்கிகளில் கிரெடிட் கார்டுகள் தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி கடந்து 
 
மேலும் இ-காமர்ஸ் இணையதளங்கள் மூலம் தான் கிரெடிட் கார்டு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது