1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bala
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2016 (12:27 IST)

வங்கி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரோஜா- வீடியோ

500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து தங்களிடமுள்ள பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி வருகின்றனர். இதனால் வங்கிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது.


இந்நிலையில் பிரபல நடிகையும், நகரி மாவட்டத்தின் எம்.எல்.ஏ.வுமான ரோஜா அப்பகுதியில் உள்ள சித்தூர் வங்கி கிளைக்கு தன்னுடைய பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக சென்றார். அங்கு மக்களுடன் வரிசையில் நின்றிருந்தார். ஆனால் சிறிது நேரத்தில் வங்கி ஊழியர்கள் திடீரென்று பணம் இல்லை என்று கூறினர். இதனால் கோபம் அடைந்த ரோஜா அங்கிருந்த வங்கி ஊழியர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது ஒரு நல்ல திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக தெரியவில்லை என்று கூறினார்.