செவ்வாய், 6 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 14 ஜூன் 2018 (17:03 IST)

உறங்கிய நாயின் மீது தார் சாலை போட்ட ஊழியர்கள் - என்ன ஆனது தெரியுமா?

உறங்கிய நாயின் மீது தார் சாலை போட்ட ஊழியர்கள் - என்ன ஆனது தெரியுமா?
உறங்கிக்கொண்டிருந்த ஒரு நாயின் மீது தார் சாலை போட்டதில் அந்த நாய்  உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் தார் சாலை அமைக்கப்பட்ட போது சாலையின் ஓரத்தில் உறங்கிய நாயை விரட்டாமலே அதன் மீதும் சேர்த்து தாரை ஊற்றி சாலையை ஊழியர்கள் போட்டு விட்டனர். இதில் வெகுநேரம் நகரமுடியால் கிடந்த அந்த நாய் பரிதாபமாக இறந்து போனது.
 
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில்  ‘மனிதாபிமானம் இறந்து விட்டதா?’ என கேள்வி எழுப்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உறங்கிய நாயின் மீது தார் சாலை போட்ட ஊழியர்கள் - என்ன ஆனது தெரியுமா?

 
இந்த அளவுக்கு அஜாக்கிரதையாக ஊழியர்கள் சாலை போட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.