செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 18 அக்டோபர் 2019 (15:27 IST)

அம்பானிய கையில பிடிக்க முடியாது டோய்... மாபெரும் இலக்கை தொட்ட ரிலையன்ஸ்!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ. 9 லட்சம் கோடி சந்தை மதிப்பை ஈட்டி இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது. 

 
முகேஷ் அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இன்று (வெள்ளிக்கிழமை) மும்பை பங்குசந்தை வர்த்தகத்தின் மதிப்பு ரூ.9,01,490.09 கோடியை தொட்டது. 
 
அதாவது நிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை புதிய உச்சமாக ரூ.1,420-யை தொட்டது. ஒரு இந்திய நிறுவனம் ரூ. 9 லட்சம் கோடி சந்தை மதிப்பை ஈட்டியிருப்பது இதுவே முதல் முறை. 
 
இதற்கு முன்னர் கடந்த ஆகஸ்ட் 2018 ஆம் ஆண்டு ரூ.8 லட்சம் கோடி சந்தை மதிப்பை அடைந்த முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையைப் படைத்திருந்த ரிலையன்ஸ் இந்த ஆண்டு தனது சாதனை முறியடித்து மாபெரும் இலக்கை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.