செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 மார்ச் 2020 (19:40 IST)

ஜோதிராதித்ய சிந்தியாவின் 22 ஆதரவு எம்.எல்.ஏக்களின் அதிரடி முடிவு

ஜோதிராதித்ய சிந்தியாவின் 22 ஆதரவு எம்.எல்.ஏக்களின் அதிரடி முடிவு
சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தை ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சி திடீரென கவிழ்ந்தது என்பது தெரிந்ததே. ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் திடீரென காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிகு நெருக்கடி ஏற்பட்டது.
 
அதன் பின்னர் கமல்நாத் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பெரும்பான்மையை நிரூபிக்கும் பின்னரே கமல்நாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்யா சிந்தியாவின் 22 ஆதரவு எம்.எல்.ஏக்கள் சற்றுமுன்னர் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து பாஜக மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜகவுக்கு 106 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 எம்.எல்.ஏக்கள் என்றாலும் தற்போது 22 பேர் ராஜினாமா செய்துவிட்டதாலும், இருவர் மரணம் அடைந்துவிட்டதாலும் தற்போது 206 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதில் 104 எம்.எல்.ஏக்கள் இருந்தாலும் ஆட்சியை பிடித்துவிடலாம் என்பதால் பாஜக எளிதில் ஆட்சியை பிடித்துவிடும் என்றே கருதப்படுகிறது.